காதலி உளவாளி என்பது அவருக்குத் தெரியாது: டிரம்ப் விளக்கம்

என்விடியா நிறுவன தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங்கிற்கு தாம் பழகிய பெண் சீன உளவாளி என்பது தெரியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்து எப்.பி.ஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.

காதலி உளவாளி என்பது அவருக்குத் தெரியாது: டிரம்ப் விளக்கம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கு, தாம் பழகிய பெண் ஒரு சீன உளவாளி என்பது தெரிந்திருக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் ஏலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் ஜென்சன் ஹுவாங் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவரிடம் நலம் விசாரிக்கும் நோக்கில் தாம் தொலைபேசியில் உரையாடியதாக டிரம்ப், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்தப் பெண், ஓர் உளவாளி என்பது தமக்குத் தெரியாது என்று ஜென்சன் ஹுவாங் தன்னிடம் கூறியதாகவும், அவரது விளக்கத்தை தாம் முழுமையாக நம்புவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தால் ஹுவாங் மிகுந்த மனவேதனையில் உள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், கடந்த மே மாதம் தாம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது ஹுவாங்கும் தம்முடன் வந்திருந்ததாகவும், எனினும் அப்போது இந்த விவகாரம் குறித்து தமக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

திருமணமான 63 வயதான ஜென்சன் ஹுவாங், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு தனது குடும்பத்தினரிடமும் ஊழியர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார். அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின்படி, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மெகாஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் மூத்த நிர்வாகியான ஏலிஸ் ஹுவாங் என்பவருடனேயே அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாக என்விடியா நிறுவனத்தின் அதிநவீன சில்லுகளை சீனாவுக்கு விற்க அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என உளவுத்துறை சந்தேகிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளுக்குத் தேவையான மேம்பட்ட சில்லுகள் சந்தையில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள என்விடியா, அமெரிக்கக் கட்டுப்பாடுகளை மீறி சீனாவுக்கு சில்லுகளை ஏற்றுமதி செய்ய அனுமதி கோரிய போதே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 

தற்போது இது குறித்து அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, சீனா இந்த உளவு குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தச் சம்பவத்தால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கோ நிறுவனத்தின் வர்த்தக இரகசியங்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று என்விடியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT