ChatGPT மூலம் கொலைத் திட்டம்? தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஆக்டன் (Acton) பகுதியில் வசித்து வந்த அர்ஜுன் அரவிந்த் (வயது 17) என்ற சிறுவன், தனது தாய் சுதா வெங்கடேசன் (வயது 45) மற்றும் அவரது 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

ChatGPT மூலம் கொலைத் திட்டம்? தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் 17 வயது சிறுவன் ஒருவன், தனது தாய் மற்றும் தம்பியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொலையைச் செய்வதற்கு முன்பாக அவன் ChatGPTஐப் பயன்படுத்தி, தனது குடும்பத்தினரைக் கொல்வது போன்ற கற்பனைக் கதைகளை உருவாக்கியுள்ளான் என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவின் ஆக்டன் (Acton) பகுதியில் வசித்து வந்த அர்ஜுன் அரவிந்த் (வயது 17) என்ற சிறுவன், தனது தாய் சுதா வெங்கடேசன் (வயது 45) மற்றும் அவரது 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

அர்ஜுனின் தந்தை, தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். 

அங்கு சென்ற பொலிஸார் சோதனையிட்டபோது, சித்தார்த் முதல் தளத்திலும், சுதா வெங்கடேசன் வீட்டின் அடித்தளத்திலும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மிட்ல்செக்ஸ் மாவட்ட வழக்கறிஞர் மரியன் ரியான் கூறுகையில், அர்ஜுன் அரவிந்த் சமீபகாலமாக இணையத்திலும், குறிப்பாக ChatGPTலும் தனது குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான "கோதிக் பாணி" (Gothic-style) கற்பனைக் கதைகளை உருவாக்கி வந்துள்ளான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கதைகள் அவன் குடும்பத்துக்கு விடுத்த மறைமுக அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கொலை செய்த பிறகு அர்ஜுன், தனது தாயின் காரில் தப்பிச் சென்றார். ஆனால், மறுநாள் காலையிலேயே வேலாண்ட் (Wayland) பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் பிணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த இரட்டைக் கொலை குறித்த விரிவான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT