அமெரிக்காவில் விமான சேவைகள் முடக்கம் மற்றும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பக் கோளாறு: சைபர் தாக்குதல் இல்லை என அதிகாரிகள் விளக்கம்

அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் திடீரெனத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதும், உலகளவில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், இதுவொரு பாரிய சைபர் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் விமான சேவைகள் முடக்கம் மற்றும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பக் கோளாறு: சைபர் தாக்குதல் இல்லை என அதிகாரிகள் விளக்கம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் திடீரெனத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதும், உலகளவில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், இதுவொரு பாரிய சைபர் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) பிற்பகல், அமெரிக்காவின் அனைத்து விமானங்களும் உடனடியாகத் தரையிறக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் வான்வெளிப் போக்குவரத்து அதிகாரிகள் அவசர உத்தரவு பிறப்பித்தனர். இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவிக்க நேரிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் வான்வழிப் போக்குவரத்து அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியின் போது, பழமையான உபகரணங்களில் ஏற்பட்ட அதிகப்படியான சுமை காரணமாகத் தொடர்பாடல் மற்றும் ரேடார் இடைவெளிகள் ஏற்பட்டதாக உத்தியோகபூர்வ விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட வலையமைப்புக் கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான பயனர்களின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பெரும் குழப்பம் நிலவியது.

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் விமான சேவைகள் ஸ்தம்பித்துப் போனதும், முன்னணித் தொழில்நுட்ப நிறுவனத்தின் சேவைகள் முடங்கியதும் சாதாரண பொதுமக்களிடையே பலத்த சந்தேகங்களை எழுப்பியது. இவ்வாறான முக்கியத் தடைகள் சாதாரண தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படுவதை விட, எதிரிகளின் சைபர் தாக்குதல்களாகவோ அல்லது பொருளாதாரத்தை முடக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகளாகவோ இருக்கக்கூடும் எனப் பல பயணிகள் அச்சம் வெளியிட்டனர்.

எவ்வாறாயினும், அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் (FAA) மைக்ரோசாப்ட் நிறுவனமும் இச்சம்பவங்களுக்குப் பின்னால் எவ்விதமான தீங்கிழைக்கும் நடவடிக்கைகளோ அல்லது சைபர் தாக்குதல்களோ இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இச்சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டின் பழமையான வான்வழிப் போக்குவரத்து அமைப்புகளை நவீனமயமாக்கப் பல பில்லியன் டொலர்கள் மேலதிக நிதி தேவைப்படுவதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை செயலாளர் சீன் டஃபி (Sean Duffy) வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு காங்கிரஸ் சபை அங்கீகரித்த 12.5 பில்லியன் டொலர் நிதியைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான செப்புக் கம்பி இணைப்புகளுக்குப் பதிலாக ஃபைபர் ஒப்டிக் (Fiber optic) கேபிள்கள் பொருத்தப்பட்டு வரும் நிலையில், முழுமையான பாதுகாப்புப் பணிகளை நிறைவு செய்ய மேலும் பாரிய நிதி தேவைப்படுவதாக வெள்ளை மாளிகையும் வலியுறுத்தி வருகின்றது.

தற்போது நிலைமைகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாகவும், விமானச் சேவை அட்டவணைகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT