பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் வன்முறை தொடர்பில் ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்து பேசுபொருளாகியது

பிரான்ஸில் இடம்பெற்று வரும் தொடர் வன்முறைகளுக்கு குடியேற்றவாசிகளே காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாரிஸ் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் வன்முறை தொடர்பில் ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்து பேசுபொருளாகியது
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரான்ஸில் இடம்பெற்று வரும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு அந்நாட்டுக்குள் வருகை தரும் குடியேற்றவாசிகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தலைநகர் பாரிஸ் மிக விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், பிரான்ஸின் எல்லைகளை மூடுவதற்குத் தவறியதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரான்ஸில் அண்மைய வார இறுதி நாட்களில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து கடைகள் சூறையாடப்பட்டு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்தபோதே, ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாரிய எண்ணிக்கையிலான குடியேற்றவாசிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் பிரான்ஸ் பாரிய தவறொன்றை இழைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், பிரான்ஸின் எல்லைகளை உடனடியாக மூடுமாறு, ஜனாதிபதி மக்ரோனிடம் தாம் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸில் இடம்பெற்று வரும் இந்த அமைதியின்மைக்கு குடியேற்றக் கொள்கைகளே பிரதான காரணம் என டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்ற போதிலும், அங்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு மற்றும் பாடசாலைகளின் அடிப்படை வசதிக் குறைபாடுகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் பிரதானமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுத் தரப்புகள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

வன்முறைகளைத் தொடர்ந்து தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், ட்ரம்பின் இந்தக் கருத்து சர்வதேச அளவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Source: aljazeera

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT