அப்பிள் சாதனங்களை இலக்கு வைத்து பாரிய இணையத் தாக்குதல்; பி.பி.சி, ஸூம் உட்பட சுமார் 200 இணையத்தளங்கள் பாதிப்பு

பயனர்களின் கடன் அட்டை (Credit card) இலக்கங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) ஆகியவற்றைத் திருடுவதற்கும், அப்பிள் சாதனங்களை மேலும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குரிய குறியீடுகளைப் பதிவேற்றுவதற்கும் இந்த இணையக் குற்றவாளிகள் முயற்சித்துள்ளனர்.

அப்பிள் சாதனங்களை இலக்கு வைத்து பாரிய இணையத் தாக்குதல்; பி.பி.சி, ஸூம் உட்பட சுமார் 200 இணையத்தளங்கள் பாதிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நிதித் தகவல்களைத் திருடுவதையும், அப்பிள் (Apple) சாதனங்களில் தீங்கு விளைவிக்கும் மென்பொருட்களைப் புகுத்துவதையும் இலக்காகக் கொண்டு, பி.பி.சி (BBC), எச்.எஸ்.பி.சி ஐக்கிய அரபு இராச்சிய வங்கி (HSBC UAE), எயார் பிரான்ஸ் (Air France) மற்றும் ஐகியா (IKEA) உள்ளிட்ட சுமார் 200 முன்னணி இணையத்தளங்கள் மீது பாரிய இணையத் தாக்குதல் (Cyber attack) நடத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை (17) செய்தி வெளியிட்டுள்ளன.

பயனர்களின் இணையவழி அனுபவங்களைத் தனிப்பயனாக்க முன்னணி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் 'ஒப்டிமைஸ்லி' (Optimizely) எனும் டிஜிட்டல் தளத்தின் கருவிகளுக்குள் ஊடுருவிய இணையக் குற்றவாளிகள் (Hackers), அதில் தீங்கு விளைவிக்கும் ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) குறியீடுகளைப் புகுத்தியுள்ளதாக 'சைபர் நியூஸ்' (Cyber News) தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 178 இணையத்தளங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பயனர்களின் கடன் அட்டை (Credit card) இலக்கங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) ஆகியவற்றைத் திருடுவதற்கும், அப்பிள் சாதனங்களை மேலும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குரிய குறியீடுகளைப் பதிவேற்றுவதற்கும் இந்த இணையக் குற்றவாளிகள் முயற்சித்துள்ளனர்.

இத்தாக்குதலை முதன்முதலில் கண்டறிந்த இணையப் பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்கொட் ஹெல்ம் (Scott Helme) திங்கட்கிழமை (16) தனது வலைப்பதிவில் இவ்விடயம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். உலகில் அதிகளவானோரால் பார்வையிடப்படும் ஸூம் (Zoom), பி.பி.சி (BBC), சி.என்.என் (CNN), சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), கிட்லேப் (GitLab), ஐகியா (IKEA), எச்.எஸ்.பி.சி ஐக்கிய அரபு இராச்சியம் (HSBC UAE), ஈக்விஃபாக்ஸ் (Equifax), எயார் பிரான்ஸ்-கே.எல்.எம் (Air France-KLM), லெட்ஜர் (Ledger) மற்றும் பீகொக் (Peacock) ஆகிய இணையத்தளங்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 16 ஆம் திகதி சுமார் ஒன்பது மணித்தியாலங்களுக்குள் தாக்குதல்தாரிகளின் கிரிப்டோ பணப்பைகளுக்கு சுமார் 7,040 அமெரிக்க டொலர்கள் சென்றடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட இணையத்தளங்களிலிருந்து பெரும்பாலான தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட் ஹெல்ம் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, 'ஒப்டிமைஸ்லி வெப் எக்ஸ்பெரிமென்டேஷன்' (Optimizely Web Experimentation) வாடிக்கையாளர்கள் சிலரைப் பாதித்த பாதுகாப்புச் சம்பவம் ஒன்று அடையாளம் காணப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஒப்டிமைஸ்லி நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் பலவீனமான பாதை முடக்கப்பட்டுள்ளதாகவும், புகுத்தப்பட்ட தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT