நடுவானில் விமான ஜன்னல் உடைந்தது: காற்றால் வெளியே இழுத்த பயணி - நூலிழையில் உயிர் தப்பினார்!

அப்போது ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி, ஜன்னல் வழியாகத் தலை மற்றும் தோள்பட்டை வரை வெளியே இழுக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அவரைப் பிடித்து பலவந்தமாக உள்ளே இழுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நடுவானில் விமான ஜன்னல் உடைந்தது: காற்றால் வெளியே இழுத்த பயணி - நூலிழையில் உயிர் தப்பினார்!
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

கிரீஸில் இருந்து ஜெர்மனி நோக்கிச் சென்ற ரயான்ஏர் (Ryanair) விமானத்தில், நடுவானில் ஜன்னல் ஒன்று திடீரென உடைந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதன்போது ஒரு பயணி ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்ட நிலையில், சக பயணிகளின் துரித செயலால் அவர் உயிர் தப்பினார்.

கிரீஸின் தெசலோனிகியில் (Thessaloniki) இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் (Memmingen) நகருக்குப் புறப்பட்ட மால்டா ஏர் (Malta Air) மூலம் இயக்கப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்தைச் சந்தித்தது. விமானத்தின் ஜன்னல் ஒன்று அதன் இடத்திலிருந்து பெயர்ந்து விழுந்ததால், கேபினில் காற்றழுத்தம் வேகமாகத் குறைந்தது. இதன் காரணமாகப் பயணிகளுக்கான ஆக்ஸிஜன் முகமூடிகள் தானாகவே கீழே இறங்கின.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அப்போது ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி, ஜன்னல் வழியாகத் தலை மற்றும் தோள்பட்டை வரை வெளியே இழுக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அவரைப் பிடித்து பலவந்தமாக உள்ளே இழுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்தத் தீவிர நிலைமையைத் தொடர்ந்து, விமானம் உடனடியாகத் திருப்பப்பட்டு மீண்டும் தெசலோனிகி விமான நிலையத்திலேயே பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஒரு பயணிக்குத் தரைதளத்தில் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. ரயான்ஏர் நிறுவனம் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், பயணிகளின் பயணத்தைத் தொடர மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

விமானத்தின் ஜன்னல் எவ்வாறு பெயர்ந்தது என்பதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து கிரேக்க மற்றும் மால்டா விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐரிஷ் விமான போக்குவரத்து ஆணையமும் (Irish Aviation Authority) இந்த விசாரணைக்குத் தேவையான உதவிகளை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT