டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

இந்த மாத்திரைகளின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒரு பக்கத்தில் டிரம்பின் முக அமைப்பும், மறுபக்கத்தில் "Trump" மற்றும் "NL" ஆகிய வார்த்தைகளும் அச்சிடப்பட்டுள்ளன.

டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எக்ஸ்டஸி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்து அதிகாரிகள், "சிவப்பு எச்சரிக்கை" விடுத்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் சோதனைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வகை மாத்திரைகள் பலவற்றில், PMMA என்னும் வேதிப்பொருள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ட்ரிம்போஸ் நிறுவனம் (Trimbos Institute) தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த PMMA என்பது MDMA போன்ற ஒரு வேதிப்பொருள் என்றும், இது உடலில் ஆபத்தான முறையில் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

"எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த மாத்திரையைப் பயன்படுத்த வேண்டாம்" என்று ட்ரிம்போஸ் நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்த மாத்திரைகளின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒரு பக்கத்தில் டிரம்பின் முக அமைப்பும், மறுபக்கத்தில் "Trump" மற்றும் "NL" ஆகிய வார்த்தைகளும் அச்சிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த மாத்திரைகளுடன் தொடர்புடைய உயிரிழப்புகளோ அல்லது கடுமையான உடல்நல பாதிப்புகளோ இதுவரை பதிவாகவில்லை என்றும் ட்ரிம்போஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT