பொது இடங்களில் AI மூக்குக் கண்ணாடிகளுக்கு தற்காலிக தடை விதிக்க நோர்வே திட்டம்

தனிப்பட்ட பயன்பாடுகள் மற்றும் பிறர் அவர்களின் சம்மதமின்றி பதிவு செய்யப்படும் அபாயம் இல்லாத சந்தர்ப்பங்களில் இவற்றை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

பொது இடங்களில் AI மூக்குக் கண்ணாடிகளுக்கு தற்காலிக தடை விதிக்க நோர்வே திட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொதுமக்கள் தங்களின் அனுமதியோ அல்லது சுய அறிவோ இன்றி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஒலிப்பதிவு செய்யப்படக்கூடும் என்ற தீவிர தனியுரிமை கவலைகளுக்கு மத்தியில், குறிப்பிட்ட சில பொது இடங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட அதி நவீன மூக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்க, நோர்வே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள், வர்த்தக அங்காடிகள் மற்றும் பொது நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களை இலக்கு வைத்து இந்த உத்தேச கட்டுப்பாடுகள் முன்மொழியப்படவுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன் பாடசாலைகள், சிறுவர் விளையாட்டு மைதானங்கள் மற்றும் இளைஞர் நிலையங்களுக்கும் இத்தடை பொருந்தக்கூடும் என்பதுடன், வைத்திய ஆலோசனைக் கூடங்கள், நீச்சல் தடாகங்கள் மற்றும் ஆடை மாற்றும் அறைகளைக் கொண்ட உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற தனிநபர் அந்தரங்கம் பேணப்பட வேண்டிய முக்கிய இடங்களும் இதில் உள்ளடக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே புகைப்படம் அல்லது வீடியோக்கள் எடுக்கப்படும் நிலையை உருவாக்கும் சக்திவாய்ந்த புதிய தொழில்நுட்பங்களின் விரைவான வரத்து தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக நோர்வேயின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொது நிர்வாகத்துறை அமைச்சர் டோர்கியர் மைக்கேல்சன் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறாயினும், இந்த மூக்குக் கண்ணாடிகளுக்கு முழுமையான தடை விதிப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தனிப்பட்ட பயன்பாடுகள் மற்றும் பிறர் அவர்களின் சம்மதமின்றி பதிவு செய்யப்படும் அபாயம் இல்லாத சந்தர்ப்பங்களில் இவற்றை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

நோர்வேயின் சிறுபான்மை அரசாங்கம் இது தொடர்பான சட்டமூலத்தை மிக விரைவில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. அதேவேளை, இத்தகைய நவீன தொழில்நுட்ப சாதனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நிரந்தர தேசிய விதிமுறைகளை வகுத்து அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT