இஸ்ரேல் அரசாங்கம் யார் கையில்? ஞாயிற்றுக்கிழமை தெரியும்!
இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்த உத்தியோகபூர்வ தீர்மானத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்ட தீவிர ஆலோசனைகளைத் தொடர்ந்தே, அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவை விட எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சட்ட விதிகளுக்கு அமைய நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பலமும் தகுதியும் யாருக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமக்கு உள்ளதாக அதிபர் ஹெர்ஸாக் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு கட்சிக் கூட்டணிகளுக்கு இடையிலும் அவற்றுக்குள்ளும் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகள் காரணமாக, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் சூழல் இன்னமும் தெளிவாக உருப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.