உலகிலேயே அதிக சொத்து வைத்திருப்பவர்கள் யார்? முதல் இடத்தில் இந்த நாட்டின் மக்கள்!

UBS 2026 உலக செல்வ அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்து மக்கள் சராசரியாக அதிக சொத்து வைத்திருப்பவர்கள். அமெரிக்கா மற்றும் லக்ஸம்பர்க் அடுத்த இடங்களில் உள்ளன.

உலகிலேயே அதிக சொத்து வைத்திருப்பவர்கள் யார்? முதல் இடத்தில் இந்த நாட்டின் மக்கள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகளவில் அதிக சொத்து வைத்திருப்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்விக்கு புதிய பதிலை UBS நிதி நிறுவனம் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டுக்கான உலக செல்வ அறிக்கை வழங்கியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, உலகிலேயே சராசரியாக அதிக செல்வம் கொண்டவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் என தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சுவிஸ் மக்களின் சராசரி சொத்து மதிப்பு சுமார் 910,382 அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கர்களின் சராசரி சொத்து மதிப்பு சுமார் 696,277 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தை லக்ஸம்பர்க் பிடித்துள்ளது. அந்நாட்டு மக்களின் சராசரி சொத்து மதிப்பு சுமார் 654,732 டொலர்கள் என அறிக்கை கூறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தில் உயர்ந்த வருமான நிலை, வலுவான நிதி அமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் காரணமாக செல்வம் அதிகமாக உள்ளது. மேலும், அந்நாட்டில் மில்லியனர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

சுமார் 944,000 பேர் மில்லியனர்களாக இருப்பதாகவும், வயது வந்தவர்களில் சுமார் 13.1 சதவீதம் பேர் மில்லியனர்கள் என்றும் UBS அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகளாவிய செல்வ விநியோகத்தில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முன்னிலையில் இருப்பது, அதன் பொருளாதார நிலைத்தன்மையை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT