டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுத்தால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மறுக்கும் வாய்ப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த முடிவு பாகிஸ்தானின் தொடர்ச்சிப் பயணத்தை நேரடியாக பாதிக்கக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.
பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மறுக்கும் வாய்ப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த முடிவு பாகிஸ்தானின் தொடர்ச்சிப் பயணத்தை நேரடியாக பாதிக்கக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தொடக்க சுற்றில் ஒரே ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. தொடக்க சுற்றுக்குப் பிறகு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினால், அவை வேறு பிரிவுகளில் இடம்பெறும் என்பதால் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில்தான் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இருக்கும்.
பாகிஸ்தான் இந்தியாவுடன் லீக் போட்டியில் விளையாடாமல் விலகினால், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இரண்டு புள்ளிகளைப் பெறும். இதனால் பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற மற்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். அதோடு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி, போட்டியில் விளையாட மறுக்கும் அணியின் நிகர ரன் விகிதமும் பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தானின் முன்னேற்ற வாய்ப்பு மேலும் சிக்கலாகலாம்.
‘ஏ’ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. தொடரின் அடுத்த கட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது குறித்து இறுதி முடிவை அரசாங்கமே எடுக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அரசியல் காரணங்களால் விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணித்த நிகழ்வுகள் கிரிக்கெட் வரலாற்றில் பலமுறை நடந்துள்ளன. முந்தைய காலங்களில் பல அணிகள் பாதுகாப்பு அல்லது அரசியல் காரணங்களால் போட்டிகளில் இருந்து விலகியுள்ளன. இருப்பினும், தற்போதைய காலத்தில் கிரிக்கெட் மிகப்பெரிய வர்த்தகத் துறையாக வளர்ந்துள்ளதால், இத்தகைய முடிவுகள் விளையாட்டு மற்றும் பொருளாதார ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.