குழப்பமான எதிர்க்கட்சிக்குள் மீண்டும் கூட்டணியா? திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (2) இரவு சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழப்பமான எதிர்க்கட்சிக்குள் மீண்டும் கூட்டணியா? திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (2) இரவு சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரணில் விக்ரமசிங்கவின் தொழிற்சங்க இயக்குநருமான சமன் ரத்னபிரியவின் மகனின் திருமண நிகழ்வில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சமன் ரத்னபிரியாவின் மகனின் திருமண விழா கொழும்பிலுள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்றது. அரசியல் கட்சி வேறுபாடுகள் இன்றி அரசியல் தலைவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். சமன் ரத்னபிரிய, இதனை “ஒரு புதிய ஆரம்பம்” என தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்ததும் கவனத்துக்குரியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த திருமண நிகழ்விற்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் ஒரே மேசையில் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பை காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த உரையாடலில் ராஜித சேனாரத்ன, மனோ கணேஷன், வஜிர அபேவர்தன, லக்ஷ்மன் பொன்சேகா, திகாம்பரம், சாமர சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சமன் ரத்னபிரிய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொழிற்சங்க இயக்கத்தை ஒன்றிணைக்க முயற்சித்ததும், கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததும் அரசியல் வட்டாரங்களில் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவரது குடும்ப விழாவில் ரணில் மற்றும் சஜித் சந்தித்ததை சாதாரணமான தற்செயலான நிகழ்வாக பார்க்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வரவுள்ள தேர்தல்களை முன்னிட்டு, அரசியல் கட்சிகளுக்கிடையே புதிய கூட்டணிகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த கூட்டணிகளின் தலைமையைக் குறித்த முரண்பாடுகள் மீண்டும் மீண்டும் தலைதூக்குகின்றன. குறிப்பாக, கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டதற்கான காரணங்கள் மீண்டும் நினைவூட்டப்படுவதாகவும், ரணில், சஜித் மற்றும் நாமல் ஆகியோருக்கிடையிலான அதிகார சமநிலை தொடர்பான சிக்கல்கள் இன்னும் தீராத நிலையில் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT