இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கிறது
இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 08 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மூன்றாம் கட்டத்தின் கீழ் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழை, வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மற்றும் எதிர்வரும் நாட்களில் பெய்யக்கூடிய மழையை கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட மண்சரிவு அபாய முன்னறிவிப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 08 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மூன்றாம் கட்டத்தின் கீழ் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் தொலுவ, உடுதும்புர, மினிப்பே மற்றும் மெததும்புர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, நில்தண்டாஹின்ன, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை அமுலில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 05 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள் அதிக அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.