யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இருவரும் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இருவரும் உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இருவரும் உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளவாலை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தையே நேற்று உயிரிழந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இவ்விரட்டைக்குழந்தைகளில் பெண் குழந்தை உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று அதிகாலை ஆண் குழந்தைக்கு திடீரென வாந்தியெடுப்பு ஏற்பட்டதுடன், குழந்தை மயக்கமடைந்ததால், உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
குழந்தையின் சடலத்துக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் முன் விசாரணை நடத்தினார். குழந்தை மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாததால், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு அனுப்பப்படவுள்ளன.