அசாமில் ரிக்டர் 5.1 நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்க, பீதியில் மக்கள் வீடுகளை விட்டு ஓடினர்
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
அசாமில் இன்று (ஜனவரி 5, 2026) அதிகாலை 4.17 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் அசாமின் மோரிகோன் மாவட்டத்தில், பூமிக்கு அடியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.
நிலநடுக்கம் மோரிகோன் மட்டுமல்லாமல், அருகிலுள்ள பகுதிகளிலும் தெளிவாக உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால், கடும் குளிர் மற்றும் பனியையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் பீதியில் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
அசாம் உட்பட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், புவியியல் ரீதியாக நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுவதால், சரியான கட்டுமான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு தயார்நிலை மிகவும் முக்கியமானதாக உள்ளது.