மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை - என்ன நடந்தது?

‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்த மீரா வாசுதேவன் தொடர்ந்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நவம்பர் 18, 2025 - 18:02
நவம்பர் 18, 2025 - 18:04
மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை - என்ன நடந்தது?

‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்த மீரா வாசுதேவன் தொடர்ந்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருவதுடன், இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மலை​யாளத்​தி​லும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்​தார்.

பின்​னர் நடிகர் ஜான் கொக்​கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016ம் ஆண்டு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்ற நிலையில், ஒளிப்பதிவாளர் விபின் என்பவரைத் திருமணம் செய்தார். இப்போது அவரையும் பிரிந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பதி​விட்​டுள்ள மீரா வாசுதேவன் ”2025 ஆகஸ்ட் முதல் தனி​யாக இருக்​கிறேன் என்​பதை அதி​காரப் ​பூர்​வ​மாக அறிவிக்​கிறேன். என் வாழ்க்​கை​யின் மிக அழகான, அமை​தி​யான கட்​டத்​தில் இப்​போது இருக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!