கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் இவரா?

வீர தீர சூரன் மற்றும் சித்தா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜுன் 24, 2025 - 11:10
கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் இவரா?

தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் இதுவரை மொத்தம் 234 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில், பான் இந்திய திரைப்படமாக தக் லைஃப் கடந்த 2025, ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. 

இப்படத்தை தொடர்ந்து வீர தீர சூரன் மற்றும் சித்தா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தக் லைஃப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 235வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த இடத்தின் ஷூட்டிங்கும் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் எஸ். யு அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படமானது முழுக்க க்ரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக்கவுள்ளதாம்.

இந்த படத்தைக் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!