பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
1978ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் அறிமுகமான கோட்டா சீனிவாச ராவ், அனைத்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழில் சாமி உள்ளிட்ட படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். கோட்டா சீனிவாச ராவ் தமிழ், தெலுங்கு, கன்னடா என சுமார் 750 படங்களில் நடித்துள்ளார்.
ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2015ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. பாஜகவில் இணைந்து பணியாற்றிய இவர், 1999 முதல் 2004 வரை ஆந்திராவின் விஜயவாடா கிழக்கு தொகுதியின் எம்.பியாகவும் இருந்துள்ளார்.
அண்மை காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர், இன்று அதிகாலை காலமானார்.