வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்ஸி ரொட்ரிகீஸ் பதவியேற்றார்
பதவியேற்பு உரையின்போது, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் “இரண்டு தீரர்கள்” என டெல்ஸி ரொட்ரிகீஸ் புகழாரம் சூட்டினார்.
வெனிசுலாவின் முன்னாள் துணை ஜனாதிபதியான டெல்ஸி ரொட்ரிகீஸ், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிப் பிரமாணத்தை, வெனிசுவேலா தேசிய நாடாளுமன்றத்தின் தலைவராக உள்ள அவரது சகோதரர் நடத்தி வைத்தார்.
பதவியேற்பு உரையின்போது, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் “இரண்டு தீரர்கள்” என டெல்ஸி ரொட்ரிகீஸ் புகழாரம் சூட்டினார். சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் நாட்டில் ஏற்பட்டுள்ள துயரமான சூழ்நிலையின் மத்தியில் மிகுந்த வேதனையுடன் தாம் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், வெனிசுலாவுக்கு தாமே பொறுப்பாளர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா வெனிசுலாவுடன் போரில் ஈடுபடவில்லை என்றும், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், வெனிசுலாவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர வாஷிங்டன் விரும்புவதாக டிரம்ப் தெரிவித்திருந்தாலும், அதற்கான தெளிவான திட்டங்களை அவர் வெளியிடவில்லை.