அஜித்தையே கல்யாணம் செய்வேன்.. நீ கிட்ட வராத.. மாதவனையே அலறவிட்ட ஷாலினி!
அஜித்துடன் ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர, பின்னர் குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, திரைப்படங்களைத் துறந்து குடும்பத்திற்கே முழு நேரத்தை ஒதுக்கினார் ஷாலினி.
சினிமாவிலிருந்து திருமணம் செய்து கொண்டு பின்வாங்கிய பிறகும், ஷாலினியின் பிரபலமும் கவர்ச்சியும் ரசிகர்களிடையே இன்னும் குறைந்துவிடவில்லை. அஜித்தின் மனைவியாக இருப்பதாலும், அவர் கடந்த காலத்தில் நடித்த படங்களின் நினைவுகளாலும் ரசிகர்கள் தொடர்ந்து அவரை கொண்டாடிக்கொண்டே வருகின்றனர். இந்நிலையில், ஷாலினியைப் பற்றிய நடிகர் மாதவன் கூறிய ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி, தனது அழகும் இயல்பான நடிப்பும் காரணமாக சிறு வயதிலேயே பிரபலமானார். தமிழில் ‘ராஜா சின்ன ரோஜா’, ‘சிறை பறவை’ போன்ற படங்களில் நடித்த அவர், பின்னர் ‘அனியாதி பிராவு’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படம் ‘காதலுக்கு மரியாதை’. இந்த படம் வெற்றிபெற, ஷாலினியின் நடிப்புக்கும் பெயர் ஏற்பட்டது.
படங்களில் எந்தக் கதாபாத்திரத்திலும் கிளாமர் ரோல்களை ஏற்க மறுத்தும், தொடர்ந்து வெற்றிகளைப் பெற்ற ஹீரோயின்களில் ஒருவர் ஷாலினி. சிறு வயதிலிருந்தே இருந்த தன்னம்பிக்கை மற்றும் துள்ளலான குணம் அவருக்கு பெரிய பலமாக அமைந்தது.
அஜித்துடன் ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர, பின்னர் குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, திரைப்படங்களைத் துறந்து குடும்பத்திற்கே முழு நேரத்தை ஒதுக்கினார் ஷாலினி. சமீபத்திய பேட்டியில்கூட, “என்னைப்போன்றவருடன் வாழ்வது சுலபம் அல்ல; ஷாலினியே காரணம் என் வாழ்க்கை சரியாக ஓடுவதற்கு,” என்று அஜித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் மாதவன் தனது பேட்டியில் கூறிய ஒரு சம்பவம் கவனம் பெற்றுள்ளது. “அலைபாயுதே படப்பிடிப்பின் போது, ஷாலினி பலமுறை என்னிடம், ‘நான் அஜித்தையே திருமணம் செய்யப் போகிறேன். ரொமான்டிக் சீன்களில் நீ கொஞ்சம் டிஸ்டன்ஸ் வைத்துப் பண்ணு’ என்று சொல்லியிருக்கிறார். நான் கிண்டலாக ‘நானும் சரிதாவைய்தான் கல்யாணம் செய்யப்போறேன், நீயும் எதுவும் ஓவராக நடக்காதே’ என்று சொல்வேன். ஆனா ஷாலினி சொல்வது உண்மையிலேயே மனசுக்கு நெருக்கமான உணர்வோடுதான்,” என்று மாதவன் தெரிவித்தார்.