அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் இல்லை: மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் – “இஸ்ரேல், அமெரிக்காவிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம்”

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததையடுத்து, ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தி வந்தது.

அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் இல்லை: மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் – “இஸ்ரேல், அமெரிக்காவிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம்”
ADVERTISEMENT
ADVERTISEMENT

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதல்கள் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில், அண்டை மத்திய கிழக்கு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததையடுத்து, ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தி வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில், அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாத வரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தாது என்ற முடிவை எடுத்துள்ளதாக அதிபர் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவிற்கு ஈரானின் இடைக்கால தலைமை கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அவர் வலியுறுத்தினார். “ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்,” என்று அவர் அரசு தொலைக்காட்சியில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரான் அதிபரின் இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் வரும் நாட்களில் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இன்று தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீப்பிடித்து கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டு தாக்குதல்களில் இதுவரை ஈரானில் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் ஒரு தாக்குதலில் ஈரானில் உள்ள தொடக்கப்பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழந்த 160 சிறுமிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT