டுபாயில் இருந்து இஸ்ரேல் பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் விமானம் சவூதியில் அவசர தரையிறக்கம்! என்ன நடந்தது?

டுபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் பைலட் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் சவூதி அரேபியாவின் தபூக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

டுபாயில் இருந்து இஸ்ரேல் பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் விமானம் சவூதியில் அவசர தரையிறக்கம்! என்ன நடந்தது?
ADVERTISEMENT
ADVERTISEMENT

டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட ஃப்ளைடுபாய் நிறுவனத்தின் FZ1073 பயணிகள் விமானம், நடுவானில் நடந்த தாக்குதல் மற்றும் கடத்தல் முயற்சி காரணமாக சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 

விமானத்தின் பைலட்டுகளில் ஒருவர் சக பைலட்டைக் கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் மோதல் இடம்பெற்றதை ஃப்ளைடுபாய் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

டுபாயிலிருந்து 03:05 GMT மணிக்கு புறப்பட்ட இந்த விமானம், ஜோர்டான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது 05:21 GMT அளவில் திடீர் மாற்றங்களையும் குலுக்கல்களையும் சந்தித்தது. அடுத்த ஒரு நிமிடத்தில், அதாவது 05:22 GMT மணியளவில், 30 விநாடிகளுக்குள் 14,000 அடிகளுக்கும் அதிகமான உயரத்திலிருந்து (4,300 மீட்டர்கள்) விமானம் கீழே சரிந்தது. 

நிலைமையை உணர்ந்த விமானிகள் 05:31 GMT மணிக்கு பொது அவசர காலச் சமிக்ஞையான 7700ஐயும், பின்னர் 05:38 GMT மணிக்கு கடத்தல் அல்லது சட்டவிரோதத் தலையீட்டைக் குறிக்கும் 7500 சமிக்ஞையையும் விடுத்தனர். விமானத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது போர் விமானங்களை ஆயத்தப்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிவதைக் கண்ட பயணிகள் சிலர் உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்டு, காக்பிட் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பலத்த காயங்களுடன் கிடந்த பைலட்டை மீட்ட பயணிகள், விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சீர்குலைக்க முயன்ற மற்றொரு பைலட்டை மடக்கிப் பிடித்துக் கட்டினர்.

இதனைத் தொடர்ந்து விமானம் திசைதிருப்பப்பட்டு, 06:45 GMT மணிக்கு சவூதி அரேபியாவின் தபூக் மண்டல விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இத்தாக்குதலில் காயமடைந்த விமானத்தின் கேப்டனான இந்தியக் குடிமகன் ஸ்மித் மச்சார் மற்றும் முதன்மை அதிகாரி ஆகியோர் தபூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கேப்டன் ஸ்மித் மச்சார் சீரான நிலையில் நலமாக உள்ளதை இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

தாக்குதல் நடத்திய நபர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் சவூதி அரேபிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தபூக்கில் தரையிறங்கிய பயணிகள் பின்னர் மாற்று விமானம் மூலம் டெல் அவிவ் நகருக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். பெரும் விபத்தைத் தடுத்த பயணிகளின் துணிச்சலான செயலை இஸ்ரேலியப் பிரதமர் பாராட்டியுள்ளார். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த விரிவான விசாரணையும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT