ADVERTISEMENT

Tag: சவூதி அரேபியா

சவூதி அரேபியாவிலிருந்து கொழும்புக்கான விமானங்கள் ஒக். 18 வரை இடைநிறுத்தம்

 தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாமிலிருந்து கொழும்புக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து இஸ்ரேல் பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் விமானம் சவூதியில் அவசர தரையிறக்கம்! என்ன நடந்தது?

டுபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் பைலட் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் சவூதி அரேபியாவின் தபூக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை விவகாரம்: சவூதி மன்னருக்கு ஜனாதிபதி அநுர கடிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சவூதி மன்னருக்கு விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது பெற்றோரிடம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இலங்கை மற்றொரு பிரஜையை இழந்துவிடக் கூடாது: சவூதி மரண தண்டனை விவகாரத்தில் பைஸர் முஸ்தபா அவசர அழைப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் அவசர சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.

'ஒரு வார்த்தைக்காக ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கக் கூடாது': சவூதி கருணை காட்ட வேண்டுமென சஜித் கோரிக்கை

சவூதி அரேபியாவில் இலங்கை தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கருணை காட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகையும் தீப்பிழம்புகளும்: விமான சேவைகள் பாரியளவில் பாதிப்பு

சவூதி அரேபியாவின் ரியாத் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விமான சேவைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அனோஜனை காப்பாற்ற இந்தியப் பிரதமர் மோடியின் தலையீட்டைக் கோருமாறு ஜனாதிபதியிடம் மனோ வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவை மீட்க இந்தியப் பிரதமர் மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் உயிரை காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை

சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது உயிரைக் காப்பாற்ற உடனடி இராஜதந்திர தலையீட்டை பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் சீனா ரகசிய கோரிக்கை

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தீவிர இராணுவ முன்னேற்றங்களைத் தொடர்ந்து அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு ஈரானிடம் சீனா இரகசிய கோரிக்கை விடுத்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: துணைத் தூதரகம் விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு, ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர அறிவிப்பு விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு உத்தரவு!

வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை அமெரிக்க பிரஜைகள் மத்தியில் எழுந்துள்ளது.

 சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர்

ஜனவரி 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.