சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, கொழும்பு மற்றும் சவூதி அரேபியாவின் தம்மாமுக்கும் இடையேயான அனைத்து விமான சேவைகளும் ஒக்டோபர் 18 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இன்று (12) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அந்த தேசிய விமான நிறுவனம், 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமைகள் வணிக விமானச் சேவைகளுக்கு ஏற்றதாக மாற்றமடையும் போது, கொழும்பு மற்றும் தம்மாமுக்கும் இடையேயான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், தகவல்களைப் பெற விரும்பும் பயணிகள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உள்ளூர் இலக்கமான 1979, சர்வதேச இலக்கமான +94 11 777 1979, அல்லது வாட்ஸ்அப் +94 74 444 1979 மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், பயணிகள் தங்கள் பயண முகவர்களை தொடர்பு கொள்ள முடியும் அல்லது விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.srilankan.com-ஐப் பார்வையிடலாம்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT