டுபாய் விமான நிலையம் அருகே வெடிப்புச் சத்தம்: நடந்தது என்ன?

டுபாய் நகரில் உள்ள டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இந்தச் சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டுபாய் விமான நிலையம் அருகே வெடிப்புச் சத்தம்: நடந்தது என்ன?
ADVERTISEMENT
ADVERTISEMENT

டுபாய் நகரில் உள்ள டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இந்தச் சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விமானங்களின் இயக்கத்தை கண்காணிக்கும் Flightradar24 இணையதளத்தின் தரவுகளின்படி, டுபாய் விமான நிலையத்தை நோக்கி வந்த சில விமானங்கள் உடனடியாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டு பறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக டுபாய் அரசு தரப்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்த பொருள்களின் சிதைவுகள் விழுந்ததால் ஏற்பட்ட சிறிய சம்பவம் என விளக்கமளித்துள்ளது. அதே சமயம் விமான நிலையம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் பிற தகவல்களை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் கடந்த சனிக்கிழமையன்று டுபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட மற்றொரு சம்பவத்தில் நான்கு ஊழியர்கள் காயமடைந்ததுடன், விமான நிலையத்தின் ஒரு முனையம் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அந்த சம்பவம் விரைவாக கட்டுப்படுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், அதுகுறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், ஈரானிய தாக்குதல்கள் அபுதாபி விமான நிலையம், பாம் ஜுமேரா மற்றும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரபு ஆடம்பர ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய இடங்களையும் இலக்காகக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜக்கிய அரபு எமிரேட்சின் பல்வேறு இலக்குகள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், உலகின் மிகப் பரபரப்பான சர்வதேச பயண மையங்களில் ஒன்றான டுபாய் பிரதான விமான நிலையத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியிருந்தன. அந்த சூழலில் இந்த புதிய வெடிப்புச் சத்தம் ஏற்பட்டிருப்பது கவலைக்கிடமானதாகக் கருதப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT