ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா திடீர் ராணுவ தாக்குதலை மேற்கொண்டது.

ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடக்கும்: டிரம்ப் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா திடீர் ராணுவ தாக்குதலை மேற்கொண்டது.

இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து கடும் எதிர்வினை வெளிப்படுத்திய ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த மோதல் வளைகுடா பிராந்தியத்தை மட்டுமின்றி உலக அரசியலையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. போராட்டம் நேற்று ஒரு வாரத்தை நிறைவு செய்த நிலையில், இன்று எட்டாவது நாளாகவும் இரு தரப்பும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழ்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மிகப் பெரிய அளவில் தாக்குதலை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அமெரிக்க படைகள் ஈரான் மீது மிகவும் கடுமையான தாக்குதலை நடத்தும் என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் சரணடைந்துள்ளது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அரபு நாடுகளை இனி தாக்க மாட்டோம் என்ற ஈரான் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கிடையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை முன்னிட்டு அமெரிக்கா மேலும் ஒரு பெரிய போர்க்கப்பலை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT