தைவானில் நேருக்கு நேர் மோதிய கார்கள்: சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மூவர் உட்பட 7 பேர் காயம்!

தைவானின் ஹுவாலியன் பகுதியில் எதிர்திசையில் வந்த கார் ஒன்று டாக்சியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

தைவானில் நேருக்கு நேர் மோதிய கார்கள்: சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மூவர் உட்பட 7 பேர் காயம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தைவானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

நவம்பர் 7ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில், தைவான் தலைநகர் தைப்பேயிலிருந்து தெற்கே சுமார் 160 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹுவாலியன் (Hualien) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகமான ETtoday செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹுவாலியன் பகுதியிலுள்ள County Road 193 வீதியின் 7ஆவது கிலோமீற்றர் அருகே அமைந்துள்ள வளைவுப் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிர்திசையில் பயணித்த கார் ஒன்று வீதியின் நடுவிலுள்ள இரட்டை மஞ்சள் கோடுகளைத் தாண்டி, எதிரே வந்த டாக்சியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த டாக்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காரை Zhuang என்ற குடும்பப் பெயரைக் கொண்ட தைவான் விமானப்படை வீரர் ஒருவர் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தைவானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள யிலான் (Yilan) நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு வாகனங்களும் பலமாக மோதியதில் விமானப்படை வீரர் செலுத்திய கார் கவிழ்ந்ததுடன், இரண்டு வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

விபத்தின்போது காரின் முன்பக்க ஆசனத்தில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தனது கைகளில் வைத்திருந்த அவரது மனைவி, முன்பக்கக் கண்ணாடி உடைந்ததைத் தொடர்ந்து வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதாக ETtoday தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், டாக்சியில் பயணித்த சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மூவர் மற்றும் டாக்சி சாரதி ஆகிய ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உடலில் சிராய்ப்புக் காயங்கள் மற்றும் அடிபட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் எவரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT