குப்பை சேகரிக்கும் தொழிலில் இருந்து மாடலிங் துறைக்கு! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 20 வயது பெண்

குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டவாறே ஆடை அலங்கார உலகில் வாய்ப்புகளைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளார் சீனாவின் 20 வயது இளம்பெண் லெங் மிங்ஹுய்.

குப்பை சேகரிக்கும் தொழிலில் இருந்து மாடலிங் துறைக்கு! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 20 வயது பெண்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கிழக்கு சீனாவில் குப்பைகளைச் சேகரித்து தரம் பிரிக்கும் 20 வயது இளம்பெண்ணான லெங் மிங்ஹுய், தனது தனித்துவமான தோற்றம் மற்றும் மாடலிங் திறமையால் இணையத்தில் வைரலாகி, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். 

'சாவோரென் லெங்' என்ற புனைப்பெயரால் அறியப்படும் இவர், கிழக்கு அன்ஹுய் மாகாணத்தின் ஃபூயாங் கிராமத்தைச் சேர்ந்தவர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது ஜெஜியாங் மாகாணத்தின் தைஜோ நகரில் தனது படிப்புக்கு உதவிய காதலரின் தந்தைக்குச் சொந்தமான குப்பை சேகரிப்பு தொழிலில் துணையாகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் குப்பை சேகரிப்பு நிலையத்தில் லெங் வேலை செய்யும் வீடியோக்கள் இணையத்தில் பரவின. குப்பைகள் நிறைந்த கடினமான வேலைச் சூழலிலும் அவரது 1.81 மீட்டர் உயரம், 50 கிலோ எடை மற்றும் கூர்மையான முக அமைப்பு ஆகியவை இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்தன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவரது தனித்துவமான தோற்றத்தைக் கவனித்த சீனாவின் பிரபல 'கிராமத்து சூப்பர் மாடல்' லூ சியான்ரன், “லெங் ஒரு பிறவி மாடல்” எனப் பாராட்டியதுடன், அவருக்கு ஆடை அலங்கார உலகுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆடை அலங்கார மேடைகளில் நடைபயின்ற லெங் மிங்ஹுய், முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களிலும் இடம்பெற்றார். பல முன்னணி மாடலிங் நிறுவனங்கள் அழைப்பு விடுத்தபோதிலும், அவர் முழுநேர மாடலாக மாற மறுத்துவிட்டார். 

தனது வாழ்வாதாரத்துக்கு உதவிய குடும்பத்தினரின் குப்பை சேகரிப்புத் தொழிலுக்குத் தொடர்ந்து உதவ விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், குப்பை சேகரிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கான வேலை என்றும், ஆடை அலங்காரம் தனது கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படாததால், இரண்டையும் சமநிலையாகத் தொடர விரும்புவதாக அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT