பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஓர் இயற்கையான மற்றும் அவசியமான உடல் செயல்பாடு. பொதுவாக 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த சுழற்சி ஒவ்வொருவருக்கும் சிறிய வித்தியாசத்துடன் இருக்கலாம். இந்த நாட்களில் பெண்கள் உடலிலும், மனநிலையிலும் மாற்றங்களை அனுபவிப்பது இயல்பானது. இந்நிலையில், சரியான உணவுப் பழக்கங்கள் மிகவும் முக்கியம். சில உணவுகள் மாதவிடாய் காலத்தில் உள்ள உடல் மற்றும் மன சிரமங்களை அதிகமாக்கும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவியல் நிபுணர் ஸ்வேதா ஷா பஞ்சால் கூறும்ப்படி, பீரியட் காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றிய விபரத்தை இங்கே பார்ப்போம்: 🛑 1. சிப்ஸ் மற்றும் வேபர்கள் இந்த வகை பொருத்த உணவுகளில் உப்பு அளவு அதிகம். இது வயிற்று உப்புசம் மற்றும் நீர் தேக்கம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும். இவை வயிற்றுப்பிடிப்பு மற்றும் களைப்பை தீவிரமாக்கும். 🛑 2. பிஸ்கட் மற்றும் இனிப்புகள் அதிக சர்க்கரை உள்ள பிஸ்கட், கேக், மற்றும் இனிப்பு வகைகள் இன்சுலின் நிலையை பாதிக்கும். இதனால் ஹார்மோன் சமநிலை சீரழியக்கூடும். மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம். 🛑 3. கோலா மற்றும் குளிர்பானங்கள் இந்த வகை பானங்களில் கொலா, சோடா, ஆர்டிஃபிஷியல் சுவையூட்டிகள் உள்ளன. இவை உடலில் நீர்ச்சத்தைக் குறைத்து, கடுமையான வயிற்று வலிகளை தூண்டும். உடல் அதிகம் களைப்பாகி போக வாய்ப்பு அதிகம். 🛑 4. பேஸ்ட்ரி மற்றும் பேக்கிங் உணவுகள் பேஸ்ட்ரி, குக்கீஸ் போன்றவை ட்ரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அதிகமாக கொண்டவை. இது செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்படுத்தும். பீரியட் வலிகள் அதிகமாகலாம். 🛑 5. காரமான மற்றும் எண்ணெய் பொரித்த உணவுகள் பஜ்ஜி, வடை, சாமோசா போன்றவையும் சேர்க்கலாம். இவை குடலை எரிச்சலடையச் செய்து, உடலில் அசௌகரியம் மற்றும் அவசதியை அதிகரிக்கும். ✅ பொருத்தமான மாற்றங்கள் – சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்! ஸ்வேதா கூறுவது போல், சிறிய உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம், பெரிய மாற்றங்களை உங்கள் உடல் உணரும். இருப்பினும், பீரியட் காலத்தில் உணவு: எளிதில் செரிபாகக்கூடியது, உடலில் நீர்ச்சத்தை சரியாக வைத்திருக்கக்கூடியது, ஹார்மோன் சமநிலையை காக்கக்கூடியது ஆக இருக்க வேண்டும். 🌸 மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான நடைமுறை. அந்த நாட்களில் சரியான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி, தேவையான ஓய்வு எடுத்தால், நீங்கள் உடல் மற்றும் மனதளவில் நலமாக இருக்க முடியும். உடலைக் கேளுங்கள் – தேவையானதை மட்டும் கொடுங்கள். இதைப் பகிர்ந்து ஏனைய பெண்களுக்கும் இந்த முக்கியமான தகவலை கொண்டு சேர்த்துவிடுங்கள்! மாதவிடாய் சுகாதார தினம் (மே 28) நமக்கு நினைவூட்டுவது ஒன்று தான் – ஆரோக்கியம் ஆரம்பம் உணவில்தான்!
சில காய்கறிகள் முளைகட்டிய நிலையில் இருக்கும் நிலையில், சிலர் அதளைசமைத்து சாப்பிடுவார்கள். அதில் சில காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. சமையலுக்கு மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தை முளைகட்டினால் சாப்பிடக்கூடாது என்பது சிலருக்குத் தெரியும். சிலருக்கு தெரியாமல் இதுவரைக்கும் சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், முளைகட்டிய வெங்காயத்தை சாப்பிட கூடாது என்பதற்கு காரணம் என்னவென்றால், முளைகட்டிய வெங்காயம் அதிக அளவு ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்கிறது. அதிலும் குறிப்பாக n-புரோபில் டைசல்பைடு உற்பத்தி அதிகளவில் உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்துகிறது மற்றும் ஹீமோலிடிக் இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. முளைகட்டிய பூண்டை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். முளைகட்டிய பூண்டில் அதிக அளவு சல்பர் சேர்மங்கள் உள்ளன. இது செரிமான பிரச்சனைகளையும், இரத்த சிவப்பணுக்களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தையும் ஏற்படுத்தும். அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கு சில நாட்களில் முளைகட்டி இருக்கும். அதனை பலரும் சமைத்து சாப்பிடும் வழக்கம் வைத்துள்ளனர். அப்படி சாப்பிடுவதை முதலில் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய உருளைக்கிழங்கை உட்கொள்வது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் உள்ளிட்ட சோலனைன் விஷத்தை ஏற்படுத்தும்.
நாம் தினமும் சாப்பிடும் சில காய்கறிகளுக்குள் ஒளிந்திருக்கும் நன்மைகளைப் பற்றி தெரியாமலேயே நாம் அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் தக்காளி வெறும் காய்கறி மட்டுமல்ல, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பல வழிகளில் ஆதரிக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்து மையமாகும். வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற அத்தியாவசிய தாதுக்களால் நிரம்பிய தக்காளி, நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. தினமும் ஒரு தக்காளியை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கும். சரும ஆரோக்கியம் தக்காளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும், அவை சருமத்தின் பளபளப்பைப் பராமரிக்கவும், வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. அவற்றின் இயற்கையான நீரேற்றம் மற்றும் குறைந்த கலோரி, ஊட்டச்சத்தை மேம்படுத்துவதோடு எடையைப் பராமரிக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. NIH இல் வெளியிடப்பட்ட ஆய்வுகள் மற்றும் Research Gate நடத்திய ஆராய்ச்சியின் படி, தினமும் ஒரு பச்சை தக்காளி சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கும். இதய ஆரோக்கியம் NIH இன் ஆய்வு முடிவுகளின் படி, தக்காளியில் பொட்டாசியம் மற்றும் லைகோபீன் நிறைந்துள்ளன, இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்களாகும். பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது, அதே நேரத்தில் லைகோபீன் கொழுப்பின் அளவைக் குறைத்து இதய செயல்பாட்டைப் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம், ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பச்சை தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நமது உடலை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், நோய்களிலிருந்து விரைவாக மீள்வதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது, இது செல்களை சேதத்திலிருந்துப் பாதுகாக்கிறது மற்றும் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. எனவே உங்கள் தினசரி உணவில் தக்காளியை சாப்பிட வேண்டியது அவசியம். சரும நீரேற்றம் Research Gate வெளியிடப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையின் படி, சமைக்காத தக்காளியில் இயற்கையாகவே நீர், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, இவை ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு பங்களிக்கின்றன. அவற்றின் அதிக நீர் உள்ளடக்கம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது, இது சருமத்தின் மீள்தன்மை மற்றும் உறுதியை பராமரிக்க அவசியம். லைகோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. எலும்பு ஆரோக்கியம் தக்காளி வைட்டமின் கே-ன் நல்ல மூலமாக உள்ளது, இது எலும்புகளை வலுவாக பராமரிப்பதிலும் சரியான இரத்த உறைதலை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தக்காளியில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உடலின் கால்சியம் அளவை சீராக்க உதவுவதன் மூலமும் எலும்பு அடர்த்தியை ஊக்குவிக்கிறது. கண் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் தக்காளியில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் என்று NIH இல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டா கரோட்டின் நல்ல பார்வையைப் பராமரிக்க உதவுகிறது, லுடீன் கண்களை தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து பாதுகாக்கிறது, மேலும் லைகோபீன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து உட்கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு நன்மைகளையும் வழங்கக்கூடும்.
தினமும் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு அவசியமோ அதேபோல தூக்கம் என்பதும் மனிதனுக்கு அத்தியாவசியத் தேவை. ஆனால் பலரும் இன்று தூக்கம் வருவதில்லை எனக் கூறி குறைந்த நேரமே தூங்குகின்றனர். தூக்கம் வராததற்குக் காரணமே அந்த மொபைல்போன்தான் என்று பலருக்கும் தெரிவதில்லை. சிலர் குறைவான நேரம் தூங்கினாலும் மற்றவர்களைப்போல உற்சாகமாக இருப்பார்கள். சிலர் நன்றாகத் தூங்கினால் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். இது ஒவ்வொருவரைப் பொருத்து மாறுபடுகிறது. எப்படி இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளும் கூறுகின்றன. தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். தூக்கமின்மையால் கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் பிரச்னைகள், தவறான முடிவெடுப்பது, மூளை செயல்திறன் குறைவது ஏற்படலாம். தூக்கமின்மையால் மந்தம், ஒருவித எரிச்சல் ஏற்படும். இதனால் மனரீதியாகவும் நீங்கள் பாதிக்கப்படலாம். மன அழுத்தம், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஹார்மோன் அளவை சீர்குலைத்து, பசி, வளர்சிதை மாற்றம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளைப் பாதிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். போதுமான தூக்கமின்மையால் தூக்க கலக்கம் ஏற்படும். இதனால் வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இறுதியாக குறைவான நேரம் தூங்குபவர்களின் ஆயுள் காலம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல ஒரே நேரத்தில் தூங்க வேண்டும். தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என்றால் அதையே தினமும் கடைப்பிடிக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கமும் வேண்டும். அதற்கேற்றவாறு தூங்குவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தூக்கத்தைப் பாதிக்கும் மொபைல் போன் மற்றும் லேப்டாப் பயன்பாடு ஆகியவற்றை இரவில் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிட்டுவிடுவதும் நல்லது. எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ளலாம். நாள்தோறும் குறைந்தபட்ச உடற்பயிற்சி செய்வதும் உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும். தூக்கம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அதற்கு தீர்வு காண வேண்டும். அனுபவித்தால் அல்லது அதிகப்படியான பகல்நேர தூக்கத்தை அனுபவித்தால், ஒரு சுகாதார நிபுணர் அல்லது தூக்க நிபுணரை அணுகவும்.
தூக்கம் எமக்கு தொலைதூரம் என்று கண் விழி சிமிட்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான சிறந்த உணவாக ஏலக்காய் இருக்கும். ஏலக்காயில் உள்ள 'மெக்னீசியம்' மற்றும் 'ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ்’ நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் ஆக்குவதுடன் 'மெலடோனின்’ சுரப்பையும் ஊக்குவிக்கிறது. தூக்கம் வருவதற்கு உடலில் 'மெலடோனின்’ என்னும் ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது. ஏலக்காயை இரவில் மென்று சுவைப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது; இதயத்துடிப்பை இயல்பான வேகத்தில் இயங்கச் செய்ய வழிவகுக்கிறது; பதற்றத்தை தணித்து நன்றாக தூங்க உடலைத் தயார்படுத்துகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனை தினசரி வழக்கமாக்கிக் கொள்வதும் நல்லது. ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் 'கல்லீரல்’ நலமாக இயங்க ஊக்குவிக்கிறது. உடலிலுள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற இவை உதவுவதால் ரத்தம் சுத்தமாகிறது. இதனால் இயற்கை முறையிலேயே மேனி பொலிவு பெறுகிறது, உடலில் ஆற்றல் மேம்படுகிறது, நோயெதிர்ப்பு சக்தியும் கூடுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவ முறையில் 'திரிதோஷ நிவர்த்தி’ மூலிகைகளுள் ஒன்றாக கருதப்படும் ஏலக்காய் மனித உடலில் 'கபம், வாதம், பித்தம்’ ஆகிய மூன்றையும் சீராக்கும் அருமருந்தாகும்.
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17) வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.
பேலியகொடை ஞானரத்ன மாவத்தை பகுதியில் இன்று (19) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளி மீது அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மற்றொரு நபரும் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இண்டிகோ விமானத்தில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி மும்பையைச் சேர்ந்த ரியா சட்டர்ஜி என்ற பெண் பயணம் செய்துள்ளார். இந்தநிலையில் தான் விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்துவிட்டதாகக் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அவர் தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தனக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். கதவைத் திறந்த இணை விமானி "ஓ" என்று சொல்லிவிட்டு உடனடியாக கதவை மூடிவிட்டதாகவும், பின்னர் விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். விமான ஊழியர்களின் இத்தகைய அலட்சியமான பதில் தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், நிறுவனம் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் சட்டர்ஜி தெரிவித்துள்ளார். இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், கடந்த 3ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டது. இதற்கு முன்னர், வெளிநாட்டினர் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற வேரஹேரவில் உள்ள மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7ஆம் திகதி அதிகளவான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ரூ. 2,000 என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. குறித்த நடைமுறை காரணமாக, அந்தத் தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஓர் இயற்கையான மற்றும் அவசியமான உடல் செயல்பாடு. பொதுவாக 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த சுழற்சி ஒவ்வொருவருக்கும் சிறிய வித்தியாசத்துடன் இருக்கலாம். இந்த நாட்களில் பெண்கள் உடலிலும், மனநிலையிலும் மாற்றங்களை அனுபவிப்பது இயல்பானது. இந்நிலையில், சரியான உணவுப் பழக்கங்கள் மிகவும் முக்கியம். சில உணவுகள் மாதவிடாய் காலத்தில் உள்ள உடல் மற்றும் மன சிரமங்களை அதிகமாக்கும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவியல் நிபுணர் ஸ்வேதா ஷா பஞ்சால் கூறும்ப்படி, பீரியட் காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றிய விபரத்தை இங்கே பார்ப்போம்: 🛑 1. சிப்ஸ் மற்றும் வேபர்கள் இந்த வகை பொருத்த உணவுகளில் உப்பு அளவு அதிகம். இது வயிற்று உப்புசம் மற்றும் நீர் தேக்கம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும். இவை வயிற்றுப்பிடிப்பு மற்றும் களைப்பை தீவிரமாக்கும். 🛑 2. பிஸ்கட் மற்றும் இனிப்புகள் அதிக சர்க்கரை உள்ள பிஸ்கட், கேக், மற்றும் இனிப்பு வகைகள் இன்சுலின் நிலையை பாதிக்கும். இதனால் ஹார்மோன் சமநிலை சீரழியக்கூடும். மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம். 🛑 3. கோலா மற்றும் குளிர்பானங்கள் இந்த வகை பானங்களில் கொலா, சோடா, ஆர்டிஃபிஷியல் சுவையூட்டிகள் உள்ளன. இவை உடலில் நீர்ச்சத்தைக் குறைத்து, கடுமையான வயிற்று வலிகளை தூண்டும். உடல் அதிகம் களைப்பாகி போக வாய்ப்பு அதிகம். 🛑 4. பேஸ்ட்ரி மற்றும் பேக்கிங் உணவுகள் பேஸ்ட்ரி, குக்கீஸ் போன்றவை ட்ரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அதிகமாக கொண்டவை. இது செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்படுத்தும். பீரியட் வலிகள் அதிகமாகலாம். 🛑 5. காரமான மற்றும் எண்ணெய் பொரித்த உணவுகள் பஜ்ஜி, வடை, சாமோசா போன்றவையும் சேர்க்கலாம். இவை குடலை எரிச்சலடையச் செய்து, உடலில் அசௌகரியம் மற்றும் அவசதியை அதிகரிக்கும். ✅ பொருத்தமான மாற்றங்கள் – சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்! ஸ்வேதா கூறுவது போல், சிறிய உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம், பெரிய மாற்றங்களை உங்கள் உடல் உணரும். இருப்பினும், பீரியட் காலத்தில் உணவு: எளிதில் செரிபாகக்கூடியது, உடலில் நீர்ச்சத்தை சரியாக வைத்திருக்கக்கூடியது, ஹார்மோன் சமநிலையை காக்கக்கூடியது ஆக இருக்க வேண்டும். 🌸 மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான நடைமுறை. அந்த நாட்களில் சரியான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி, தேவையான ஓய்வு எடுத்தால், நீங்கள் உடல் மற்றும் மனதளவில் நலமாக இருக்க முடியும். உடலைக் கேளுங்கள் – தேவையானதை மட்டும் கொடுங்கள். இதைப் பகிர்ந்து ஏனைய பெண்களுக்கும் இந்த முக்கியமான தகவலை கொண்டு சேர்த்துவிடுங்கள்! மாதவிடாய் சுகாதார தினம் (மே 28) நமக்கு நினைவூட்டுவது ஒன்று தான் – ஆரோக்கியம் ஆரம்பம் உணவில்தான்!