இரவில் இத்தனை முறைக்கு மேல சிறுநீர் கழிக்கிறீங்களா? ஆண்களே!  ஆபத்தான 'இந்த' புற்றுநோயா இருக்க வாய்பிருக்காம்!

இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் போன்ற திரவங்களை அதிகமாக குடித்தால், அல்லது இரவு உணவிற்குப் பிறகு அல்லது அதற்குப் பிறகு காஃபின் மற்றும் மது அருந்தினால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பொதுவானது. 

Nov 8, 2023 - 07:03
இரவில் இத்தனை முறைக்கு மேல சிறுநீர் கழிக்கிறீங்களா? ஆண்களே!  ஆபத்தான 'இந்த' புற்றுநோயா இருக்க வாய்பிருக்காம்!

இரவு நேரத்தில் தூங்கும்போது, சிறுநீர் கழிக்க எழுவது உங்களுக்கு வேதனையாக இருக்கலாம். இது உங்கள் தூக்க நிலையை சீர்குலைக்கிறது. ஒருமுறை நீங்கள் தூக்கத்திலிருந்து எழுவது சாதாரணம். ஆனால், நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுகிறீர்கள் என்றால், அவை சாதாரணமானது அல்ல.

இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் போன்ற திரவங்களை அதிகமாக குடித்தால், அல்லது இரவு உணவிற்குப் பிறகு அல்லது அதற்குப் பிறகு காஃபின் மற்றும் மது அருந்தினால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பொதுவானது. 

இவை இல்லாமல், இரவில் நீங்கள் கழிப்பறைக்கு அடிக்கடி சென்றால், அவை புறக்கணிக்கப்படக் கூடாத அடிப்படை உடல்நலப் பிரச்சினையைக் குறிக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இருப்பினும், நீங்கள் இரவில் அடிக்கடி கழிப்பறைக்கு செல்வது புற்றுநோயின் அறிகுறியாக கருதப்படுகிறது. 

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்ன சுகாதார பிரச்சனையை குறிக்கிறது மற்றும் அவற்றின் அறிகுறிகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

கழிப்பறைக்கு எத்தனை முறை செல்வது?

லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சியில், பங்கேற்றவர்களில் 28 சதவீதம் பேர் இரவில் குறைந்தது மூன்று முறையாவது கழிப்பறையைப் பயன்படுத்தினார்கள் என்று எக்ஸ்பிரஸ் யூகே தெரிவித்துள்ளது.

அவர்கள் ஏன் இதை அனுபவிக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, அவர்களில் 20 சதவீதம் பேர் தங்களுக்கு புரோஸ்டேட் பிரச்சனையுடன் தொடர்பு இருப்பதாக நினைத்தார்கள். 

29 சதவீதம் பேர் வயது முதிர்ந்ததால் என்று நினைத்தார்கள். மற்றவர்கள் படுக்கைக்கு முன் அதிக தண்ணீர் குடிப்பதால் அல்லது இரவில் தாமதமாக காஃபின் குடிப்பதால் என்று தெரிவித்திருந்தார்கள்.

நீங்கள் ஏன் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும்?

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் கழிப்பறைக்கு அதிகமாக செல்வதற்கு பல சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். 

இது விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் அல்லது புற்றுநோய் காரணமாக இருக்கலாம். எனவே, அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது தாமதமாக சிறுநீர் கழித்தல் போன்ற எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஏனெனில், இது ஆபத்தான சுகாதார பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். இது சர்க்கரை நோயால் வருபவையா? இல்லை வேறு காரணமா? என்பதை பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம்.

விளாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!

ஆண்களுக்கு புரோஸ்டேட் பிரச்சினை

கிங் எட்வர்ட் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், ஆண்களில் 55 சதவீதம் பேர் புரோஸ்டேட் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 43 சதவீதம் பேர் மருத்துவரைப் பார்ப்பதைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர். 
இதற்குப் பின்னால் உள்ள காரணம் சிறுநீர் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதில் அவர்கள் சங்கடமாக உணரலாம் அல்லது பிறப்புறுப்பு பரிசோதனையின் பயமாக இருக்கலாம்

புரோஸ்டேட் புற்றுநோயின் பிற அறிகுறிகள்

மேற்கூறிய அறிகுறிகளை தவிர, யு.கே தேசிய சுகாதார அமைப்பால், பட்டியலிடப்பட்டுள்ள புரோஸ்டேட் புற்றுநோயின் பிற சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகள், கழிப்பறைக்கு விரைந்து செல்ல வேண்டிய அவசியம், சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிரமம் (தயக்கம்), சிறுநீர் கழிக்கும் போது சிரமப்படுதல் அல்லது நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது, பலவீனமான ஓட்டம், உங்கள் சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகவில்லை மற்றும் சிறுநீரில் இரத்தம் அல்லது விந்துவில் இரத்தம் வெளியேறுவது ஆகியவை அடங்கும்.

விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்டை எவ்வாறு நிர்வகிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது புற்றுநோயின் அறிகுறியாக இருக்காது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்குப் பொதுவாகக் காணப்படும் புரோஸ்டேட் சுரப்பியின் விரிவாக்கம் காரணமாகவும் இது ஏற்படலாம். இந்த நிலையைக் கட்டுப்படுத்த நீங்கள் செய்யக்கூடிய பல வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளன.

இருப்பினும், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை பெறுவதற்கு முதலில் உங்கள் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் புரோஸ்டேட்டின் அளவைக் குறைப்பதற்கும் உங்கள் சிறுநீர்ப்பையைத் தளர்த்துவதற்கும் மருந்துகள் கொடுப்பார்கள்.

ஆல்கஹால், காஃபின் மற்றும் ஃபிஸி பானங்கள் போன்றவற்றை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ ஆரம்பிக்க வேண்டும். ஆரோக்கியமற்ற குப்பை உணவுகளை தவிர்த்தல், செயற்கை இனிப்புகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துதல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல் மற்றும் இரவு நேரத்தில் குறைவாக தண்ணீர் குடித்தல் ஆகியவற்றை கடைபிடிக்க மறக்காதீர்கள்.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...