பெண்கள் ''வெள்ளி'' நகைகளை அணிவதால் இவ்வளவு நன்மையா?

நகை அணிவதால் நம் உடலில் உள்ள முக்கிய நரம்புகள் தூண்டப்பட்டு உறுப்புகள் நன்றாக செயல்படும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தங்கம் மட்டுமே ஏற்றது. 

பெப்ரவரி 2, 2024 - 00:41
பெப்ரவரி 2, 2024 - 00:44
பெண்கள் ''வெள்ளி'' நகைகளை அணிவதால் இவ்வளவு நன்மையா?

தமிழர் பாரம்பரியத்தில் நகைகள் என்பது மிகவும் முக்கியம். நகை அணிவதால் நம் உடலில் உள்ள முக்கிய நரம்புகள் தூண்டப்பட்டு உறுப்புகள் நன்றாக செயல்படும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தங்கம் மட்டுமே ஏற்றது. 

தங்கம் மட்டுமல்லாமல் நாம் முத்து, வெள்ளி போன்றவற்றிலும் நகை அணிந்து கொள்ளலாம். பொதுவாக எல்லா நகைகளையும் நாம் தங்கத்தில் அணிவோம். ஆனால் காலில் உள்ள கொலுசு, மெட்டி போன்றவை தங்கத்தின் அணிவதில்லை.

வெள்ளி நகைகள் நமது ஆயுள் விருத்தி செய்யக்கூடியது. உடலின் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். சிறுவயதில் இருந்து பெண் குழந்தைகள் சிறு வயதில் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதால் கொலுசை அணிவிக்கிறோம். 

வெள்ளி கொலுசு அணிவதால் குதிகால் நரம்பினை தொடுகிறது. இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள உறுப்புகளை பராமரிக்க வெள்ளி உதவுகிறது. 

பொதுவாக ஆண்களை காட்டிலும் பெண்கள் உடல் அதிகமாக வெப்பமடையும். இதற்காக சிறுவயதில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணியலாம். அதேபோல் பெண்கள் தான் ஆண்களை விட அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்காக காலில் கொலுசு அணியலாம். 

கொலுசு அணிவதால் ஏற்படும் நரம்பு தூண்டுதலால் பெண்களின் இடுப்பு பகுதி உறுதியாகிறது. திருமண சம்பிரதாயங்களில் மிகவும் முக்கியமானது மெட்டி அணிவது. முதலில் மெட்டி அணிவது என்பது ஆண்களுக்கு இருந்தது. அது காலப்போக்கில் மறைந்து விட்டது. 

மெட்டி அணிவது என்பது சடங்காக மட்டுமல்லாமல் திருமணம் ஆன பெண் என்பதை தாண்டி சில அறிவியல் காரணம் உள்ளது. பொதுவாக மெட்டி காலில் இரண்டாவது விரலில் அணிவார்கள். இந்த விரலில் உள்ள நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இதனால் மெட்டி அணிந்தால் கருப்பைக்கு இதயத்திற்கும் நன்மை தருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!