தேசியசெய்தி

‘நாடு ஒன்றாக’ தேசிய நடவடிக்கை: நாடு முழுவதும் 802 பேர் கைது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒன்பது பேர் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LGBTQ சுற்றுலா ஊக்குவிப்பு திட்ட அனுமதி வாபஸ்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் AG அறிவிப்பு

இந்த அனுமதியை வழங்கி இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் (SLTDA) தலைவர் வெளியிட்டிருந்த கடிதம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பை: இலங்கையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; பொலிஸார் களத்தில் 

பார்வையாளர்கள் பெரிய பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன் உபகரணங்கள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதானத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு

பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான அறிவிப்பு

மார்ச் 05 ஆம் திகதி இரவு 09.00 மணி வரை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ வழக்கின் உத்தரவு ஒத்திவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; வெளியான தகவல்                                                                                      

இறந்தவர் மற்றொரு குழுவுடன் அவிசாவளை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்குள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

சுதந்திர தினத்தையொட்டி 9,158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

இந்த பதவி உயர்வுகள் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேச முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டிய தருணம் – பிரதமர் 

தேசிய இலக்குகளை அடைவதற்காக குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்து, நாட்டின் மொத்த முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெரிய கல்வி மாற்றங்களை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது – சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி

சுதந்திர தின வாழ்த்து செய்தியிலும், வளமான நாடும் உயர்ந்த வாழ்க்கை தரமும் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

குழப்பமான எதிர்க்கட்சிக்குள் மீண்டும் கூட்டணியா? திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (2) இரவு சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக சிந்தக ஹேவபத்திரண தேர்வு

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைச் சேர்ந்த சிந்தக ஹேவபத்திரண இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கொழும்பு பஸ் சாரதிகளில் 60% பேர் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், சுமார் பாதி விபத்துகளுக்கு சாரதிகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த சாரதிகளில் பெரும்பாலானோர் மதுபானம் அல்லது போதைப் பொருட்களை பயன்படுத்தியிருந்ததாகவும் அமைச்சர் விளக்கினார்.

வங்கி மற்றும் பொலிஸாரின் பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சில மோசடிக்காரர்கள் வட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் மூத்த பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, பொலிஸ் சீருடையில் தோன்றுவதும் பதிவாகியுள்ளது. 

அஸ்வெசும ஜனவரி மாத உதவித்தொகை தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு

இரு கட்டங்களுக்கும் பொருந்தும் ஜனவரி மாத முதியோர் உதவித்தொகையும் அதே நாளில் பயனாளிகளின் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.

இலங்கைக்கு மூன்று ஆண்டுகள் குழந்தை பருவ புற்றுநோய் மருந்துகளை வழங்க WHO ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையில் குழந்தை புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.