இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு

பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் 42வது கணக்காய்வாளர் நாயகராக சமுதிகா ஜயரத்ன இன்று (பெப்ரவரி 5) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுள்ளார். இதன் மூலம், இந்த முக்கிய பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளார்.

அவரது நியமனம் கடந்த பெப்ரவரி 3ஆம் தேதி அரசியலமைப்பு சபையால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக மூத்த பிரதிப் பிரதான கணக்காய்வாளராக பணியாற்றியிருந்த ஜயரத்ன, முன்னாள் கணக்காய்வாளர் நாயகர் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன 2025 ஏப்ரல் 8ஆம் திகதி ஓய்வு பெற்றதையடுத்து நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்த பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடைக்காலத்தில் தர்மபால கம்மன்பில தற்காலிகமாக இந்த பதவியை வகித்திருந்தார்.

இந்த பதவிக்காக முன்வைக்கப்பட்டிருந்த பல நியமனங்கள் அரசியலமைப்பு சபையால் நிராகரிக்கப்பட்ட நிலையில், சமுதிகா ஜயரத்னின் பெயர் இறுதியில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT