1990 சுவசெரியாவின் புதிய முயற்சி: கொழும்பில் மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை

இந்த மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவப் பிரிவுகள் முதற்கட்டமாக கொழும்பு உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகர்ப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

1990 சுவசெரியாவின் புதிய முயற்சி: கொழும்பில் மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

அவசர மருத்துவ உதவியை நோயாளிகளுக்கு இன்னும் வேகமாக வழங்கும் நோக்கில், 1990 சுவசெரிய அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர மருத்துவப் பிரதிபலிப்பு சேவையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் வீதித் தடைகள் காரணமாக அம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை அடைவதில் ஏற்படும் தாமதத்தை குறைத்து, உயிர்காக்கும் ஆரம்பகட்ட மருத்துவ உதவியை மிகக் குறுகிய நேரத்தில் வழங்குவதே இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவப் பிரிவுகள் முதற்கட்டமாக கொழும்பு உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகர்ப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அம்புலன்ஸ் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னரே, நோயாளிகளுக்கு தேவையான முதலுதவி மற்றும் அடிப்படை அவசர மருத்துவச் சிகிச்சைகளை வழங்கும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற அவசர மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களில் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள், முதலுதவி உபகரணங்கள் மற்றும் அடிப்படை அவசர மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தத் திட்டம் முன்னோடித் திட்டமாக 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் கொழும்பு மற்றும் மேலும் சில முக்கிய நகர்ப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக 1990 சுவசெரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நோயாளிகள் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பான மிகவும் முக்கியமான நேரத்தில் உடனடி மருத்துவ உதவியை வழங்கி உயிர்களை காப்பதே இந்த புதிய முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT