கொட்டாஞ்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 18 வயது இளைஞன் கொலை; சந்தேகநபர்கள் அடையாளம்
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த 18 வயது இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (14) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக இரு நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு, இக்கொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.