மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ வழக்கின் உத்தரவு ஒத்திவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ வழக்கின் உத்தரவு ஒத்திவைப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முதற்கட்ட ஆட்சேபனைகள் அறிவிப்பை மார்ச் 25 ஆம் திகி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (05) முடிவு செய்தது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ​​விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், 14,000 கெரம் பலகைகளையும் 11,000 தாம் பலகைகளையும் சட்டவிரோதமாக வாங்கி, விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபாவுக்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற விசாரணைகளின் பின்னர்,முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் கடந்த ஆண்டு மேல் நீதிமன்றம் விதித்தது.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் இருவரும் தங்கள் தண்டனைகளை ரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கக் கோரி மேல்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (News21)

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT