LGBTQ சுற்றுலா ஊக்குவிப்பு திட்ட அனுமதி வாபஸ்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் AG அறிவிப்பு

இந்த அனுமதியை வழங்கி இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் (SLTDA) தலைவர் வெளியிட்டிருந்த கடிதம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

LGBTQ சுற்றுலா ஊக்குவிப்பு திட்ட அனுமதி வாபஸ்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் AG அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

LGBTQ சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்க திட்டமிடப்பட்ட சுற்றுலா ஊக்குவிப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படுவதாக சட்டமா அதிபர் இன்று (பிப்ரவரி 10) மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

இந்த அனுமதியை வழங்கி இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் (SLTDA) தலைவர் வெளியிட்டிருந்த கடிதம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. குறித்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் விசாரணை நடைபெறும்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, மனுவை மேலதிகமாக பரிசீலிப்பதற்காக வழக்கை மார்ச் 4 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT