குறித்த பாதுகாப்பு இல்லங்களில், அடிப்படை வசதியேனும் இல்லாதமையால், பெண்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உதவியாக சீனாவினால் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18) நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றன ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து பண மோசடி செய்யப்படுகிறது.