இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருடன் வெளிவிவகார அமைச்சின் நான்கு மூத்த அதிகாரிகளும் வருகைத் தந்துள்ளனர்.
மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை வந்த இந்தக் குழுவினர், பிற்பகல் 02.45 மணியளவில் இந்தியாவுக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.