ஜெய்சங்கரை சந்தித்து பேசினார் அலிசப்ரி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி துரிதப்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளியிட்டேன் என ஜெய்சங்கர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அத்தியாவசியமான இந்தத் தருணத்தில், மேலும் ஒத்துழைப்பை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன்போது அவர் கூறியுள்ளார்.
இதன்போது, உட்கட்டமைப்பு இணைப்பு, எரிசக்தி, தொழில் சுகாதாரம் முதலான துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.