பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

Jan 19, 2023 - 09:58
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (20) நிறைவடைகின்றது.

அதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையுடன் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்