ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் என்பன தமது கட்சிகளின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் நாட்டுக்காக இணைய முடியுமாயின் கட்டாயம் இணையும் என பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய ஆகக் குறைந்த செலவின் கீழ் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
முட்டை ஒன்றை 50 ரூபாய்க்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.