நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் முதற்கட்ட அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், வீட்டுத் தோட்ட சாகுபடிக்காக 500,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்கும் தேசிய திட்டம் இன்று (09) தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிது. இதில் முதல் மற்றும் 5ஆவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, நேற்று ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கனடா ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன், மற்றுமொரு நபரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றத்தை 20 வயது இளைஞன் ஒப்புக்கொண்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் சரித்திரத்திலேயே மிகப் பெரிய நிறுவன ஊதியத் திட்டத்திற்கு வியாழக்கிழமை அன்று பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.