பிரான்ஸ் ஜனாதிபதி அணிந்திருந்த கண்ணாடியின் ரகசியம் என்ன?

மக்ரோனுக்கு அந்தக் கண்ணாடியை அன்பளிப்பாக வழங்க Henry Jullien நிறுவனம் முன்வந்த போதிலும், அதை அவர் ஏற்க மறுத்துள்ளார். முழுத் தொகையையும் தனிப்பட்ட முறையில் செலுத்தி கண்ணாடியை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 25, 2026 - 12:23
பிரான்ஸ் ஜனாதிபதி அணிந்திருந்த கண்ணாடியின் ரகசியம் என்ன?

இந்த வாரம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் உலகத் தலைவர்கள் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர். இருப்பினும், அந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron)அணிந்திருந்த மூக்குக்கண்ணாடி பலரின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது.

உள்ளரங்கில் ஏன் சன் கிளாஸ்? உடற்பயிற்சியில் காயம் ஏற்பட்டதா? என்றெல்லாம் சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால், உண்மை வேறுபட்டதாக இருந்தது. மக்ரோனின் வலது கண்ணில் ரத்த நாளம் ஒன்று வெடித்ததால் கண் சிவந்த நிலையில் இருந்தது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், அந்த சிவப்பை மறைப்பதற்காகவே அவர் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவர் அணிந்திருந்த கண்ணாடி முழுமையாக பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட Maison Henry Jullien நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதன் விலை சுமார் 775 அமெரிக்க டொலர். இந்த கண்ணாடியை 2024ஆம் ஆண்டில் வாங்க மக்ரோன் விருப்பம் தெரிவித்ததாக The Guardian செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மக்ரோனுக்கு அந்தக் கண்ணாடியை அன்பளிப்பாக வழங்க Henry Jullien நிறுவனம் முன்வந்த போதிலும், அதை அவர் ஏற்க மறுத்துள்ளார். முழுத் தொகையையும் தனிப்பட்ட முறையில் செலுத்தி கண்ணாடியை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாவோஸில் மக்ரோனை அந்தக் கண்ணாடியுடன் கண்ட பிறகு, உலகம் முழுவதும் பலர் அதே கண்ணாடியைத் தேடத் தொடங்கினர். இதன் விளைவாக Henry Jullien நிறுவனத்தின் இணையதளம் அதிகமான பார்வையாளர்களால் தற்காலிகமாக செயலிழந்ததாகவும் The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!