LIVE ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை இன்று 11-வது நாளாக தொடர்கிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை இன்று 11-வது நாளாக தொடர்கிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஈரானின் கடற்படை முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒருபோதும் ஏற்கமாட்டார் என்றும், ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடைபெற்று வருகின்றன என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். 

மேலும், “ஆபரேஷன் எபிக் பியூரி” எனப்படும் இந்த ராணுவ நடவடிக்கை வெற்றிப் பாதையில் முன்னேறி வருவதாகவும், ஈரானின் ஆயுதக் களஞ்சியம் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க ராணுவம் இதுவரை 5,000-க்கும் அதிகமான இலக்குகளை தாக்கியுள்ளது. இருப்பினும், சில முக்கியமான இலக்குகள் இன்னும் தாக்கப்படாமல் இருக்கின்றன. தேவையான சூழ்நிலை ஏற்பட்டால் பின்னர் தாக்குவதற்காக அவை திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர