குடும்ப தகராறு விபரீதமாக மாறியது: அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் குடும்பப் பிரச்சினை காரணமாக, இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறு விபரீதமாக மாறியது: அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவில் குடும்பப் பிரச்சினை காரணமாக, இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் United States-இன் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா புறநகர்ப் பகுதியான Lawrenceville நகரில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்த மூன்று குழந்தைகள் அச்சத்தில் அலுமாரிக்குள் ஒளிந்துகொண்டதாகவும், அதில் ஒருவர் சமயோசிதமாக அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 51 வயதுடைய இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கொடுமையான தாக்குதல் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அவர்கள் தற்போது உறவினர்களின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தத் துயரச் சம்பவம் குறித்து Consulate General of India, Atlanta தனது எக்ஸ் (X) தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT