பாரம்பரியத்திலிருந்து டிஜிட்டலுக்கு: இலங்கையர்கள் வெற்றி பெறும் முறையில் ஒரு புரட்சி
தேசிய லொத்தர் சபை (NLB), Lucky1.lk நிறுவனத்தை தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக தனது அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் விற்பனையாளராக புதுப்பித்துள்ளது.
இலங்கையின் முன்னணி டிஜிட்டல் லொத்தர் தளத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய லொத்தர் சபை LUCKY1.LK உடன் டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுப்படுத்துகிறது.
தேசிய லொத்தர் சபை (NLB), Lucky1.lk நிறுவனத்தை தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக தனது அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் விற்பனையாளராக புதுப்பித்துள்ளது. இது இலங்கையின் முன்னணி டிஜிட்டல் லொத்தர் தளமான Lucky1.lk மீது உள்ள நம்பிக்கையையும், அதன் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு DigitalX Pvt Ltd நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் Lucky1.lk, நம்பகத்தன்மை, புதுமை மற்றும் வாடிக்கையாளர் வசதிகளில் ஆறு ஆண்டுகளாக சிறந்த சேவையளித்து, இலங்கையின் மிக நம்பகமான டிஜிட்டல் லொத்தர் தளமாக உருவெடுத்துள்ளது.
பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைத்து, Lucky1.lk எழுத்துகள், இராசிகள் அல்லது எண்கள் அடிப்படையில் ‘Search & Buy’(தேடுதல் & வாங்குதல்) வசதியை வழங்குகிறது. லொத்தர் டிக்கெட்டுகளை குறுஞ்செய்தி (SMS)அல்லது கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் வாங்கலாம்.
முடிவுகள் மற்றும் வெற்றித் தொகை தொடர்பான தகவல்கள் நேரடியாக வாடிக்கையாளர்களின் அலைபேசிகளுக்கு அனுப்பப்படும். Dialog, Mobitel மற்றும் Hutch ஆகிய நெட்வொர்க்குகள் மூலம் மொபைல் மீள்நிரப்பல் செய்யும் வசதியை வழங்கும் இலங்கையின் சில லொத்தர் தளங்களில் Lucky1.lk ஒன்றாகும்.
பதிவு முற்றிலும் இலவசம் என்பதுடன், தானியங்கி முறையில் லொத்தர் வாங்கும் வகையில் நாளாந்த விருப்ப சந்தா வசதியும் உள்ளது. Lucky1.lk லொத்தர்கள் Daraz தளத்திலும் கிடைக்கின்றன. இதன்மூலம் இலங்கையின் முன்னணி இணைய வணிக தளங்களில் ஒன்றின் வழியாக உத்தியோகப்பூர்வமாக தேசிய லொத்தர் சபையின் (NLB) டிக்கெட்டுகளை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
இந்த தளம் வாரந்தோறும் உயர்மதிப்புள்ள பரிசுகளை வழங்கி வருகின்றது, சராசரியாக வாரத்துக்கு சுமார் 14 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகையை வழங்குகிறது. தினசரி சீட்டிழுப்பு மூலம் அடிக்கடி வெற்றிபெறும் வாய்ப்புகளை வழங்குகின்றது.
தொழில்நுட்பத்தைத் தாண்டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக பங்கேற்று எளிதாக பரிசுகளைப் பெற Lucky1.lk வாய்ப்பளிக்கிறது.
தேசிய லொத்தர் சபையின் (NLB) அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் விற்பனையாளராக இந்தப் புதுப்பித்தல், இலங்கையின் லொத்தர் துறையை மேலும் அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும், எதிர்காலத்துக்கு தயாராகவும் மாற்றுவதற்கான Lucky1.lk இன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும் தகவல்களுக்கு www.lucky1.lk இணையதளத்தைப் பார்வையிடுங்கள் அல்லது 0117 989 989 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.