மலையகம்

விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு; தந்தை படுகாயம்

சுற்றுலா சென்றுவிட்டு, கரந்தெனிய பிரதேசத்திலுள்ள வீட்டுக்குக் காரில் வந்துகொண்டிருந்த குடும்பமே வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் விபத்தில் சிக்கியுள்ளது.

மலையகத்தில் மரக்கறிகளின் விலை உயர்வு

தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகிப் போவதற்கான ஆபத்து உள்ளதாக, இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணிலுக்கு புகழாரம் சூட்டிய சாகல!

அஸ்வெசும திட்டம் தொடர்பில் இதுவரை 4 இலட்சத்து 91 ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும்,  6 ஆயிரத்து 773 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் கூறினார்

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டினால் கடும் நடவடிக்கை  – ஜீவன் எச்சரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபோவதாகவும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விடுத்தார்.

கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கனர்; ஒருவர் மரணம்

பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பழமையான தேயிலை தோட்டத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு

கடந்த 25ஆம் திகதி கொள்வனவு செய்வோர் குழுவொன்று தோட்டத்திற்கு வந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடர்ச்சியான பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

EPF, ETF பணத்தை விரைவில் வழங்க விசேட அமைச்சரவை பத்திரம்!

அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002ஆம் முதல் ஈ.பி.எப், ஈ.டி.எப் என்பன செலுத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என இ.தொ.காவின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்  சிறுத்தையின்  சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

பொகவந்தலாவை பகுதியில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்; வன்மையாகக் கண்டித்துள்ள ஜீவன் தொண்டமான்

பொகவந்தலாவை நகருக்கு இன்று (24) சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்தார்.

நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

ஹோட்டல் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தியத்தலாவை பஸ் விபத்தில் ஆறு பேர் காயம்

இந்த விபத்தில்  5 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

மலையக ரயில் சேவை பாதிப்பு

ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான ரயில் பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளது.

ரயிலில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி

ரயில் பயணித்த நடந்து சென்ற நிலையில், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த இளைஞர்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மலையக மக்களின் 200 வருட வரலாற்றை நினைவுக்கூறும் நிகழ்வுகள்

எதிர்வரும் 2023 மே மாதம் 19, 20, 21 ஆம் திகதிகளில் நுவரெலியா சினிசிட்டா மண்டபம் மற்றும் ரேஸ்கோஸ் மைதானத்தில் கண்காட்சி மற்றும் ஆய்வரங்கு உட்பட பல விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.