மலையகத்தில் மரக்கறிகளின் விலை உயர்வு

தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகிப் போவதற்கான ஆபத்து உள்ளதாக, இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் மரக்கறிகளின் விலை உயர்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகிப் போவதற்கான ஆபத்து உள்ளதாக, இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாகவே தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும். ஆனால், இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

மரக்கறிகளின் விலை விவரம்

ADVERTISEMENT
ADVERTISEMENT

லீக்ஸ் ஒரு கிலோகிராம் விலை – 200 ரூபாய்

பாவக்காய் ஒரு கிலோகிராம் விலை – 200 ரூபாய்

வெண்டிக்காய் ஒரு கிலோகிராம் விலை – 190 ரூபாய்

புடலங்காய் ஒரு கிலோகிராம் விலை – 180 ரூபாய்

தக்காளி ஒரு கிலோகிராம் விலை – 360 ரூபாய்

கோவா ஒரு கிலோகிராம் விலை – 320 ரூபாய்

கறிமிளகாய் ஒரு கிலோகிராம் விலை – 480 ரூபாய்

கத்திரிக்காய் ஒரு கிலோகிராம் விலை – 250 ரூபாய்

நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோகிராம் விலை – 290 ரூபாய்

போஞ்சி ஒரு கிலோகிராம் விலை – 600 ரூபாய்

பச்சைமிளகாய் ஒரு கிலோகிராம் விலை – 500 ரூபாய்

கரட் ஒரு கிலோகிராம் விலை – 440 ரூபாயிலிருந்து 480 ரூபாய்வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

(க.கிஷாந்தன்)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT