80 அடி பள்ளத்தில் லொறி கவிழ்ந்து விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலியா - நல்லதண்ணி மரே தோட்ட புதுகாடு பகுதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

80 அடி பள்ளத்தில் லொறி கவிழ்ந்து விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

மஸ்கெலியா - நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்ட புதுகாடு பகுதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சுமார் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (21) மாலை 06 மணியளவில் தேயிலைக் கொழுந்துகளை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், லொறி வீதியை விட்டு விலகிப் பள்ளத்தில் பாய்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்தில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, ஆரம்பகட்ட சிகிச்சைகளுக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT